குழந்தையாய் மாறி நாம் கொஞ்சி விளையாடிட
தோழியாய் என் மன சோகம் களைந்திட
காதலி யாய் என்றும் கவலை மறந்திட
அன்னையாய் என்னை உன் மார்பில் புதைத்திட
எப்போது வருவாய்
மனைவி எனும் உறவுடன் !
Posted by
ராம் பிரசாத்
comments (0)
Posted by
ராம் பிரசாத்
comments (0)
கணினி உன் அழகைக் கண்டேன்
கன்னியின் எண்ணம் விட்டேன்
கண்ணே உன் ஞாபகத் திறனைக்
கண்டநாள் முதலே எந்தன்
மனமெனும் குரங்கு தானே
மங்கையைக் காணத் தவிர்த்து
உன்னையே எண்ணத் தூண்டும்
உணர்வை மாற்றத் தானே
உண்மையில் உறுதி சொல்வேன்
உமையாலும் முடியா தென்றே!
Posted by
ராம் பிரசாத்
comments (1)
சிந்தும் துளிகள் மழைத் துளி இல்லையடி கண்ணே
நான் அனுப்பும் காதல் துளி
என் இதயம் அழும் கண்ணீர்த்துளி
உடையில் தாங்கி உலற விடாதே
உள்ளம் தாங்கி உறைய விடு !
Posted by
ராம் பிரசாத்
comments (1)
காதலைக் கண்ணில் கொண்டு
கார்முகில் வந்தாள் நேற்று
கண்டேன் அவளின் எழிலைத்
தூறலாய்த் தானே இன்று
காண்பேன் அவளை நாளை
மேகமாய் எட்டாத் தொலைவில் என்றே
எப்படி சமாதானம் சொல்வேன்
எத்தனிக்கும் எந்தன் மனமே !